வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் வெளியாக இருக்கும் புதிய அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது.

இது வாட்ஸ் ஆப்பிற்கு அப்டேட் காலம். வாட்ஸ் ஆப்பின் ”ஆர் அண்ட் டி” குழு ஓவர் டைம் வேலை பார்க்கிறார்களோ என்னவோ, மாதம் ஒரு அப்டேட் என்று வித்தியாச வித்தியாசமாக எதையாவது விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ் ஆப் பீட்டாவில் வாரம் ஒரு வசதியை சோதனை செய்து பார்க்கிறார்கள்.

பேஸ்புக் பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், மார்க் தன்னுடைய மார்க்கை வாட்ஸ் அப் பக்கம் திருப்பி இருக்கிறார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் புதிய அப்டேட்களை அள்ளி வழங்குகிறது.

ஆர் அண்ட் டி திட்டம்
உலகில் மக்கள் பயன்படுத்தும் ஒரே மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தத்தான், வாட்ஸ் ஆப் குழு செயல்பட்டு வருகிறது. அதற்காகவே வாட்ஸ் ஆப்பின் ”ஆர் அண்ட் டி” குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் வீடியோ கால், வாட்ஸ் ஆப் கால் வசதிகளில் அது பெரிய அளவில் முன்னேறவில்லை. சில போட்டி ஆப்கள் அதில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதை முறையடிக்கவே வாட்ஸ் ஆப் இந்த செயலில் இறங்கியுள்ளது.

group-calling-for-voice-and-video

குரூப் வீடியோ

அந்த வகையில் தற்போது குரூப் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. முன்பு ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால் இந்த அப்டேட்டில் நாம் குரூப் வீடியோ கால் பேசமுடியும். நேற்று வெளியான அப்டேட்டில் இந்த வசதி சேர்க்கப்ட்டுள்ளது.

எப்படி இதை செய்கிறார்கள்

வாட்ஸ் ஆப் இப்போது உலகின் முன்னணி சாட்டிங் ஆப்பாக மாறிவிட்டது. அதனால் இதை பாதுகாப்பாக ”எண்டு – எண்டு என்கிரிப்ஷன்” மூலம் பயன்படுத்த முடியும். சாதரணமாக போனில் கான்பிரன்ஸ் கால் பேசுவது போல நபர்களை இணைத்து இதில் வீடியோ கால் பேச முடியும்.

என்ன செக்

ஆனால் வாட்ஸ் ஆப்பில் இருக்கும் கான்டாக்டில் உள்ள 4 பேரிடம் மட்டுமே ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். இது மிகவும் தெளிவாக துல்லியமாக இருக்கும். வீடியோ கான்பிரன்ஸ் கால் வசதி என்று இது அழைக்கப்படுகிறது. இதன் அடுத்தகட்ட சில சோதனை முயற்சிகள் ஏற்கனவே வாட்சப் பீட்டாவில் வந்துள்ளது.

Advertisements