“ஓம் நமோ வேங்கடேசாய நமஹ”

🌺🌺திருப்பதி எனும் பிரம்மாண்டம்🌺🌺

பதிவு : 1 :-

நேற்று இரவு(27-03-2017) National Geographic Channel ல் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி பற்றிய பதிவு இது.

******திருப்பதி :-

ஏழு மலைகளின் மலைத்தொடர்களில் மலைத் தொடர்களின் மேல் ஏறத் தொடங்கும் இடமாக “திருப்பதி” இருக்கிறது.

எட்டாயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த மலைகள் 50 கோடி வருடங்கள் பழமையானது.

இந்த மெய்மறக்க வைக்கும் மலைகள் வழியாகச் செல்லும் பயணம் நம்மை கோவில் நகரமான திருமலைக்கு அழைத்துச் செல்கிறது.

உலகெங்கும் இருக்கும் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் இந்து மக்களுக்கு இது ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் இருக்கிற இந்த “திருமலை” உலகத்திலேயே அதிகமாக தரிசிக்கப்படுகிற இந்து யாத்திரைத் தலமாக இருக்கிறது.

இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 60000 லிருந்து 70000 மக்கள் வருகிறார்கள். விழாக்காலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர்.

மக்களின் நோக்கமெல்லாம் “ஸ்ரீவேங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் போவது மட்டும் தான்”.

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரும், ஞானியுமான “அன்னமாச்சார்யாரோட பூஜைக்குரியராக இருந்தவர் ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள்”.

அன்னமாச்சார்யார் பெருமாளைப் புகழ்ந்து ஏறத்தாழ 32000 பாடல்களை எழுதியிருக்கிறார்.

ஆனால், வேங்கடாஜலபதி பெருமாளின் கதைகள் இன்னும் பழமையானது.

🌺🌺புராணங்கள் :-

முப்பெரும் சக்திகளின் கோட்பாடு பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம் எனில், புராணங்களில் சொல்லப்படும் பழமையான இந்து மத புத்தகங்களைப் பற்றி நாம் பார்த்தாக வேண்டும்.

வேதங்களில் சொல்லப்படும் மும்மூர்த்திகளில் “காக்கும் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும், படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மாவும், அழித்தல் தொழிலைச் செய்யும் சிவனும் அடக்கம்”.

இவர்களில் விஷ்ணுவிற்குத் தான் திருமலைக் கோவிலுடன் ஒரு விசேஷ உறவு இருக்கிறது.

இந்து மதத்தின் படி, கடவுளின் முக்கியத்துவத்தின் பற்றி இந்தக் கோவிலின் நான்கு தலைமுறை அர்ச்சர்களில் ஒருவர் விளக்கம் கொடுக்கிறார்.

🌺🌺 அர்ச்சகர் கூறுவது :-

விஷ்ணு என்பது ஒரு பேர் கிடையாது. அது இந்த அண்டத்தையும், அதையும் தாண்டி இருக்கிற ஒரு அளவில்லா சக்தியைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கிறது.

இந்த அளவில்லா ஒரே சக்திக்குள்ள மூன்று விசயங்கள் அடங்கி இருக்கிறது. அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று சக்திகளும் விஷ்ணு என்பதில் அடங்கியிருக்கிறது.

venkateshwara-swamy-sanjayinfotech.com

🌺🌺அவதாரம் :-

புராணக் கதைகள் சொல்வதன் படி விஷ்ணு பூமிக்கு பல முறை மனித அவதாரங்களிலும், மிருக அவதாரங்களிலும் வந்திருக்கிறார்.
வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும், கதை எப்படி இருந்தாலும் ஒரு விசயம் மட்டும் அப்படியே இருக்கிறது.

விஷ்ணு தான் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளாக அவதாரம் எடுத்து இந்த திருமலையில் “காரண்ய மூர்த்தியா” நிரந்தரமாக இருக்கிறார்.

🌺🌺 கர்ப்பக்கிரகம் :-

இந்தக் கோவிலில் சக்தி வாய்ந்த கர்ப்பக்கிரகங்களில் இருக்கும் இந்தப் பெருமாளைத் தரிசனம் செய்வதற்குத்தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

🌺🌺திராவிடக் கட்டிடக்கலை :-

திருமலைக் கோவில் திராவிடக் கட்டிடக்கலைகளின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மகிழ்விக்கக்கூடிய கலைநயமிக்க இந்தக் கட்டிடக்கலை ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கட்டடக்கலையில் பிரமிடு மாதிரியான கோபுரங்களும், தூண்களும் நிறைந்த மண்டபங்கள் இருக்கிறது.

அந்தக் கோபுரங்களிலும், மண்டபங்களிலும் வெவ்வேறு ராஜ பரம்பரையோட கதைகளைச் சொல்லும் கல்வெட்டுக்களும், கைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களும் இருக்கிறது.

🌺🌺 பல நூற்றாண்டுகள் :-

திருமலை 9ம் நூற்றாண்டு பல்லவர்கள் காலத்திலிருந்து, 11 நூற்றாண்டுகளில் இருந்த தஞ்சாவூர் சோழர்கள் காலம் வரை மாறிக்கொண்டே இருந்துள்ளது.

14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் கோவில் நகரம், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக் கீழ் வந்துள்ளது.

1800 களில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டுகளோட முதல் 25 வருடம் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இங்கு வருவாய் வசூலித்திருக்கிறார்கள்.

🌺🌺 TTD :-

கடைசியாக 1933 ல் ஒரு சிறப்புச் சட்டம் இயற்றி கோவிலை நிர்வகிக்கவும், அது சார்ந்த வேலைகளுக்கு ஒரு தன்னாட்டுக் குழுவை உருவாக்கினார்கள். அதற்கு TTD – Tirumala Tirupati Devasthanam என்று பெயர் வைத்தனர்.

இன்றைக்கும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்து எல்லா வேலைகளையும் TTD தான் கவனித்து வருகிறது.

🌺🌺 பக்தர்களின் குறிக்கோள் :-

திருமலைக்கு வரும் எல்லா பக்தர்களின் குறிக்கோளும் ஒன்றாகத் தான் இருக்கிறது. தங்களின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாளைத் தரிசனம் செய்வது தான் அந்தக் குறிக்கோள்.

🌺🌺 பயணங்கள் :-

ஒருவரின் முழு முயற்சி இல்லையென்றால் அவர் தரிசனத்திற்கே போக முடியாது.
இந்த நீண்ட பயணம் திருப்பதி மலையின் அடிவாரத்திலிருந்து துவங்குகிறது. மேலே செல்ல இரண்டு வழிகள் இருக்கிறது.

சேஷாசலத்தின் வளைவான பாதைகளில் வாகனத்தில் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் செல்லலாம்.

ஆனால், நிறைய பேர் 16 ஆம் நூற்றாண்டுல இருந்த ராஜா செய்த மாதிரி, நடந்து செல்லும் பாதையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மலை ஏறுபவர்கள் இரண்டு நடைபாதையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒன்று ஸ்ரீவாரி மெட்டுப்பாதை. இது குறைந்த தூரமாக இருந்தாலும் 2 கி.மீ கஷ்டப்பட்டு மலை ஏற வேண்டும்.

மற்றொன்று அலிபிரி மெட்டுப்பாதை. 9 கி.மீ இருக்கும் இந்தப் பாதை நீளமாக இருக்கும். ஆனால், சுலபமான ஏற்றமாக இருப்பதால் இது ரொம்ப பிரபலம்.

மேலே ஏறும் போது பல பக்தர்கள் மலையேறுவதைக் காணலாம். உதாரணத்திற்கு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், குங்குமம் வைத்துக் கொண்டே செல்வார்கள்.

அலிபிரி மெட்டுப்பாதையில் காளி கோபுரம் தான் முக்கியமான நிறுத்தம். தரிசனத்திற்கு பதிவு பண்ணவும் இங்கு தான் முடியும்.

இந்த நீண்ட தூரப் பயணத்தில் நிறைய நவீன கால வசதிகள் இருக்கிறது. இது எல்லாம் பல வருடங்களாக இருக்கும் TTD நிர்வாகத்தால்தான் சிறப்பாக நடைபெறுகிறது.

நடைபயணமாகவோ, வாகனத்திலோ வரும் பக்தர்கள் ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இருக்கும் திருநிலையை அடைகின்றனர்.

இங்கிருந்து சில பேர் “கல்யாண கட்டா” என்ற இடத்திற்கு முடி காணிக்கை செலுத்தச் செல்கின்றனர்.

இங்கு நடக்கும் ஒரு சிறப்பு சடங்கு திருமணம் முழுக்க பார்க்கக்கூடிய தனித்துவமான காட்சிக்கு வழிவகுக்கிறது.

நாம் எங்கு திரும்பினாலும் கண்டிப்பா அங்கு ஒரு மொட்டைத்தலை நமக்குத் தெரியும். தரிசனத்திற்கு முன்னாடி மொட்டை போடுவது வழக்கமா இருக்கு.

இது ஆணவத்தை அடியோடு அழிப்பதோடு, கடவுளிடம் செல்வதற்கு முன் “தான் என்ற கர்வத்தையும் அழிக்கிற ஒரு சடங்காக இது இருக்கிறது”.

மொட்டை அடித்தபின் தன்னுடைய பெருமாளைத் தரிசனம் பண்ண பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களா வைகுண்ட வரிசை வளாகம் உட்பட தரிசன வரிசைல நிறைய ஓய்வறையை உருவாக்கியுள்ளனர்.

இது நல்ல விசயம். ஏனெனில், ஒரு நாளைக்கு சராசரியா 50000 மக்களுக்கு மேல் வருவதால் 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு இருந்ததால் TTD அதிகாரிகள் ஒரு எளிய தீர்வுக்காக தகவல் தொழில்நுட்ப பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அதாவது, தரிசனத்துக்கு இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருமலையில் பக்தர்கள் எந்தப் பாதையில் வந்தாலும் சரி, எந்த வரிசையில் வந்தாலும் சரி அது எல்லாமே ஒரு இடத்திற்கு தான் வந்து சேரும். அதுதான் “வேங்கடாஜலபதி” பெருமாள் கொவில்.

🌺🌺 பிரதானக் கோவில் :-

பிரதானக் கோவில் 2.2 ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இதன் நீளம் 415 அடி, அகலம் 263 அடி. பக்தர்கள் “மகதுவாரா” என்ற 50 அடி உயரத்தில் இருக்கும் வெளிக் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், வேலிப்பாதைகள் நிறைந்த கொடிமரம் அருகில் வருகிறார்கள்.

பக்தர்கள் நடக்கும் போது அவர்களின் இடது பக்கம் “ரங்கநாயக மண்டபம்” இருக்கிறது. வலது பக்கத்தில் “அயன மஹால்” இருக்கு.
முடிவில்லாத பிம்பங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி நிறைந்த மண்டபம் இது.

பக்தர்கள் ” வெள்ளிவாசல்” என்கிற வெள்ளி நுழைவாசல் வழியாக பிரதான கர்ப்பக்கிரகத்திற்குச் செல்கிறார்கள்.

அதற்கடுத்து “பங்கார வாசல்” அல்லது “தங்க நுழைவாயில்”. தங்கநுழைவு வாயிலுக்குள் ஒரு தடுப்பு உள்ளது. அதைத்தாண்டி பெரும்பாலான பக்தர்கள் போக முடியாது.

சில இரும்பு அறைகளைத் தாண்டி தான் உள் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்ல முடியும். செல்லச் செல்ல ஒவ்வொரு அறையின் அகலம் குறைந்து கொண்டே செல்கிறது.

இந்த மாதிரி குறுகலாக இருப்பது ஆன்மீக தெய்வீகக் கருவறையைக் குறிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள்.

அதனால் தான் மூலவர் இருக்கிற பிரதான கடவுள் இருக்கும் அறையை சமஸ்கிருதத்தில் “கர்ப்பக்கிருகா” தமிழ்ல “கருவறை” என்று சொல்கிறார்கள்.

மூலவரோட அளவில்லாத சக்தி, காற்று, மழை, வெயில், வெளிச்சம், புயல் மாதிரியான விசயங்களால் பாதிக்கப்படாம இருக்கும் வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.சன்னிதிகள் கூட ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டும் பிரவேசிக்கக்கூடிய இடமாக இருக்கிறது.

அங்கு இருக்கும் அர்ச்சகர்கள் மட்டும் தான் சன்னிதிக்குள் பிரவேசிக்க முடியும். மற்ற பக்தர்கள் எல்லோரும் வெளியே வரிசையில் நின்று தான் சுவாமியைத் தரிசிக்க முடியும்.

தங்க நுழைவுவாயிலுக்குள் நுழையும் போது நிறைய பக்தர்கள் பெருமாளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வருகிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களின் நேரம் முடிவதற்குள்ள சில நொடிகள் பெருமாளைத் தரிசனம் பண்ண முடியும்.

இருந்தாலும், சிலர் மட்டுமே பார்க்கக்கூடிய உள் கருவறையைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒரு வழி இருக்கு. அவர்கள் பெருமாளின் தங்கவிமானத்தை தரிசனம் செய்து கொள்கிறார்கள். பெருமாளின் தரிசனம் பெற்ற பின்பும் பக்தர்கள் சன்னிதியில் இருக்கும் தடுப்பு அருகில் நிற்கிறார்கள்.

ஆனால், TTD க்கு இங்கு செயல்படுவதில் ஒரு பெரிய சவால் இருக்கிறது. ஆகம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிற பழமையான விதிகளின் படி, திருமலா திருப்பதிக் கோவிலின் நுழைவு வாயிலை TTDயால் விரிவாக்கம் செய்ய முடியாது.

அதனால், உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் இருக்கும் ஒரே பழமையான கதவுகள் வழியாக கூட்டத்தைச் சமாளித்தாக வேண்டும்.

ஆகமவிதிப்படி செயல்படுவதால், இந்த குறிப்பிட்ட வழியைத் தவிர வேறு வழிகள் கிடையாது. இந்த பாதையில் எவ்வித மாற்றங்களும் செய்ய இயலாது.

கருவறையில் பெருமாளைத் தரிசிக்க உள்ள வரிசையில் பக்தர்கள் கூட்டமாக நுழைகிறார்கள். TTD சேவகர்கள் முதலில் ஒரு பக்தர்கள் கூட்டத்தை உள்ளே நுழைய விடுகிறார்கள்.

அதன்பின், அந்த பக்தர்கள் வெளியே வரும் வரை, வெளியில் இருந்தோ யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சராசரியான நாளில் 1மணி நேரத்திற்குள் பிரதான கதவுகள் வழியாக 4000 பக்தர்கள் பெருமாள் தரிசனம் பெறுகிறார்கள்.

பொதுவாக TTD சேவகர்கள் 2 தடவை 3 நிமிடம் உள்ளே விட்டு 4 நிமிடத்தில் வெளியே விடுவார்கள். அதுவே மூன்றாவது முறை 3 நிமிடம் ஆட்களை உள்ளே விட்டு 5 நிமிடத்தில் வெளியே விடுகிறார்கள்.

ஏனெனில், வரிசை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கர்ப்பக்கிரகத்துக்கு முன்னாடி சில நொடிகளாவது இருக்க முடிந்த ஒவ்வொரு பக்தரும் அதிர்ஷ்டசாலி தான்.

நிறைய பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சில நொடிகளே போதும். சிலருக்கு அது பத்தாது. சிலர் சில நிமிடம் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால், இந்த அறையில் நிறைய நேரம் பார்க்க அற்புதங்கள் நிறைய இருக்கிறது. சடங்குகள் அனுமதிக்காத இடத்துல ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், மாதிரிக்கோவில் என்று அழைக்கப்படும் “நமூனா” ஆலயம் தான்.

இந்த நமூனா ஆலயம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்….

“ஓம் நமோ வேங்கடேசாய நமஹ”

Advertisements