இன்று புனித வெள்ளி நாளை முன்னிட்டு தேவாலயர்ங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.

ஏசுநாதர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். பின்பு அவருக்கு யுதேயா நாட்டு மன்னன் பிலாத்துவால் மரண தண்டனை விதித்தான். இதையடுத்து ஏசுநாதர் தலையில் முள்கிரீடம் வைத்து அவரை ஜெரூசலமில் இருந்து கொல்கதா மலை வரை தோளில் சிலுவையைச் சுமந்தவாறே இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரை மலை உச்சியில் சிலுவையில் அறைந்து கொன்றனர்.

ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளியாக அதாவது துக்க நாளாக கடைபிடிக்கிறார்கள். புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். அதிலும் குறிப்பாக மதிய வேளையில் நடக்கும் பிரார்த்தனையின்போது ஏசுநாதர் சிலுவையைச் சும்ந்து சென்றபோது கூறிய 7 திருவசனங்களை மையாக வைத்து பாதிரியார்கள் அருளுரை வழங்குவார்கள்.

சில கிறிஸ்தவர்கள் ஒரு வேளையும், சிலர் 2 வேளையும், இன்னும் சிலர் 3 வேளையும் சாப்பிடாமல் நோன்பு இருப்பார்கள். புனித வெள்ளி அன்று பல தேவாலயங்களில் பிஷப்புகள், பாதிரியார்கள் ஏசுநாதர் சிலுவையைச் சுமந்து சென்றதை நினைவுகூறும் வகையில் தாங்களும் சிலுவையைச் சுமந்து சிலுவைப் பாதை என்று கூறி பவனி வருவார்கள்.

ஆங்கிலத்தில் குட் பிரைடே என்றும் தமிழில் புனித வெள்ளி, பெரிய வெள்ளி என்று கூறப்படும் இந்நாள் துக்கநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று கொல்லப்பட்ட ஏசுநாதர் 3 நாட்கள் கழித்து அதாவது ஞாயிற்றுக்கிழமை உயிர் பெற்று வருவதை ஈஸ்டர் பண்டிகையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

Advertisements