திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு மார்ச் 4 முதல் 8ம் தேதி வரையுள்ள 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. மார்ச் 4ம் தேதி சீதாலட்சுமணன், ஆஞ்சநேயர் சகிதம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாக ஏழுமலையான் தெப்பத்தில் உலா வருகின்றார்.

மார்ச் 5ம் தேதி ருக்மணி சமேதராய் ஏழுமலையான் தெப்பத்தில் உலா வருகின்றார். 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

தெப்ப உற்சவத்தையொட்டி ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பக்தர்களுக்காக, தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.